உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது -சுப்ரீம் கோர்ட்
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை ஹைகோர்ட்டு வரும் மேத மாதம் 14-ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து கோவையைச் சேர்ந்த பி.கே.கணேசன், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில் மே மாதம் 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவானது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட் தலையிடாது. இதுதொடர்பாக மனுதாரர் கணேசன் சென்னை ஹைகோர்ட்டை அணுகலாம் என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.