மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஏழு நபர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தத்தோடு, அவர்களின் குடும்பங்களுக்கும் தலா 3 லட்சம் நிதி உதவி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து அரசு இதழில் அறிக்கை வெளியிடப்படுள்ளது. அதில் கூறியதாவது:-


28.7.2017 அன்று கடலூர் மாவட்டம் அரிசிபெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கலியபெருமாள் என்பவரின் மகன் திரு. சிவா என்பவர் மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதேபோல 29.7.2017 அன்று விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், க.செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. லெட்சுமணண் என்பவரின் மகன் திரு. பழனிச்சாமி என்பவர் மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக
ஏற்பட்ட மின் கசிவினால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.


2.8.2017 அன்று கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், கூடலையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் என்பவரின் மகன் திரு. வீராசாமி என்பவர் மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதே மாவட்டத்தில் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராஜவேல் என்பவரின் மகன் திரு. ராஜபாலன் என்பவர் மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.


10.8.2017 அன்று தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பசுவந்தனை கிராமத்தைச் சேர்ந்த திரு. மாரியப்பன் என்பவரின் மகன் செல்வன் அழகு செல்வம் என்பவர் விளையாடிக்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதே நாளில் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், செங்குறிச்சி மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த திரு. மலையாண்டி என்பவரின் மகன் திரு. தங்கராஜ் என்பவர் மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.


14.8.2017 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், ஒழுகரை மதுரா ஓங்கூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. எட்டியப்பன் என்பவரின் மகன் திரு. சங்கர் என்பவர் தனது விவசாய நிலத்திற்கு சென்ற போது, அறுந்து கிடந்த மின் கம்பியினை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.


இந்த செய்திகளை அறிந்து தமிழக முதல்வர் பழனிசாமி மிகவும் துயரம் அடைந்துள்ளார். மேலும் இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த ஏழு நபர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தமிழக முதல்வர் தெரிவித்துக் கொண்டார்.


மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த ஏழு நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக மு.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


இவ்வாறு அறிக்கையில் கூறப்படுள்ளது.