முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 200 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- 


ஒரு மாநிலத்தின் முன் னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.  மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் விரிவடைந்து வருகின்றன. பொதுமக்களின் போக்குவரத்துத் தேவை களை பூர்த்தி செய்யும் வகையில், முதல் - அமைச் சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்தல், புதிய வழித்தடங்களை அறி முகப்படுத்துதல், புதிய பணிமனைகளை துவக்கி வைத்தல்  போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.


டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடை பெற்ற சிறப்பு குறை தீர்க் கும் முகாமில் பெறப் பட்ட மனுக்களில் மகளிர் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டுமென்ற கோரிக் கையின் அடிப்படையில், மகளிர் நலன் கருதி, பள்ளி கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் குழந்தை களுக்காக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் 3 மகளிர் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 118 பேருந்துகள்.


விழுப்புரம் அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் 11 பேருந்துகள், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 4 பேருந்துகள், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 16 பேருந்துகள், 


கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 பேருந்துகள்,  மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 12 பேருந்து கள், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 37 பேருந்துகள்,


மொத்தம் 45 கோடியே 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 200 புதிய பேருந்துகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.