சென்னை: இந்திய கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆராயும் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் சேர்க்கப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த முயற்சிக்கு பொறுப்பான கலாச்சார அமைச்சகம் (Ministry of Culture), தென் மாநிலத்தைச் சேர்ந்த நிபுணர்களை புறக்கணித்தது எப்படி என்பது குறித்து முதல்வரின் கடிதம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது.


இந்த குழுவில் எந்தவொரு தென் மாநிலங்களிலிருந்தும், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து எந்த ஒரு பிரதிநிதியும் இல்லை என்பது சுட்டிக்காட்டப் பட்டது. தமிழகம் ஒரு புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கொண்டுள்ளதோடு திராவிட நாகரிகத்தின் தாயகமாக உள்ளது. தமிழக கலாச்சாரம் (Tamil Culture) இந்தியாவின் தெற்கில் செழித்து வளர்ந்த மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் கலாச்சாரமாகும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ALSO READ: இந்தி மொழி வெறி, எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது: MKS


கீழடி மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் அண்மையில் நடந்த தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள், உலகப் புகழ்பெற்ற சங்கம் சகாப்தத்தை கிமு 6 ஆம் நூற்றாண்டில் இருந்தே காண முடிகிறது என்பதை உறதிப்படுத்தியுள்ளன. அவ்வகையில் தமிழ் கலாச்சாரமும் மொழியும் உலகின் மிகப் பழமையான பாரம்பரியங்களில் ஒன்றாகக் கருதப்பட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



2019 செப்டம்பரில் பிரதமரின் மாமல்லபுரம் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் அங்குள்ள நினைவுச்சின்னங்களைப் பார்வையிட்டு தமிழ் பாரம்பரியத்தைப் பற்றி அறிந்து கொண்டதைப் பற்றி தமிழக முதல்வர் குறிப்பிட்டார்.  இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் எந்தவொரு காலவரிசையும் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு சரியான இடத்தை வழங்காமல் முழுமையடையாது என்று கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.


பிரதமர் மோடியின் (PM Modi) தனிப்பட்ட தலையீட்டை நாடிய முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டிலிருந்து புகழ்பெற்ற அறிஞர்களை இந்த குழுவில் சேர்த்து, நிபுணர் குழுவை புதிதாக அமைக்க கலாச்சார அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.


கலாச்சார அமைச்சர் பிரஹ்லாத் படேல் (Prahlad Patel) அறிவித்த இந்த 16 உறுப்பினர்களைக் கொண்ட குழு கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடமிருந்து ஏராளமான குறைபாடுகளை ஈர்த்துள்ளது. குழுவில் பெண்கள் இல்லை என்றும், அதில் தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ALSO READ: பெண் ஓட்டுனர்களைக் கொண்ட Solar, Electric Auto-க்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் EPS!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR