தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு இடத்திற்கான மாநிலங்களவை தேர்தல் (Rajysabha Election) செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், திமுக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக (DMK) வேட்பாளரை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் (M.K.Stalin) அறிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘2021 செப்டம்பர் 13 அன்று நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக எம்.எம் அப்துல்லா (M.M.Abdullah) போட்டியிடுவார் என அறிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த அப்துல்லா அவர்கள் திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் நல அணியின் இணை செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



அதிமுகவின் மாநிலங்கள் அவை உறுப்பினர் முகமது ஜான் அவர்கள் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள அந்த தொகுதியினை நிரப்ப தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | ட்விட்டரில் கோரிக்கை: இரவோடு இரவாக உதவி செய்த தமிழிசை சௌந்தரராஜன்


மாநிலங்கள் அவைக்கான தேர்தல் செப்டெம்பர் 13ம் தேதி நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ள நிலையி, ஆகஸ்ட் 24ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடவடிக்கை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | பாஜகவின் இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம்; குடியரசுத் தலைவர் உத்தரவு


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR