நாட்டில் கொரோனா இரண்டாவது  அலை பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவைப்பட்டால் ஜாமீன் வழங்க வேண்டும் கோரிக்கை வலுத்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கைதியாக உள்ள பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குத் தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது. பேரறிவாளன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நேற்று (2021,மே 18) தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்த கோரிக்கையை பரிசீலித்த  தமிழக அரசு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


ALSO READ | தினசரி கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் தமிழ்நாடு: மத்திய சுகாதார அமைச்சகம்


 


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள்‌ பிரதமர்‌ ராஜீவ்‌ காந்தி வழக்கில்‌ கைதாகி, ஆயுள்‌ தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல்‌ மத்திய சிறையில்‌ இருந்துவரும்‌ ஏ.ஜி.போறிவாளன்‌ (சிறைக்‌ கைதி எண்‌ 7640) அவர்களுக்கு, மருத்துவக்‌ காரணங்களின்‌ அடிப்படையில்‌ விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார்‌ டி. அற்புதம்மாள்‌அவர்கள்‌ தமிழக அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை கனிவுடன்‌ பரிசீலித்த முதல்வர்‌ . மு.க. ஸ்டாலின்‌, ஏ.ஜி. பேரறிவாளன்‌ அவர்களுக்கு, உரிய விதிகளைத்‌ தளர்த்தி, 30 நாட்கள்‌ சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என சில நாட்களுக்கு முன் மதிமுக தலைவர் வைகோவும் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO REA D | Oxygen production: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR