`கலைஞர் என்றாலே போராட்டம்தான்...` மெரினாவில் நினைவிடம் திறப்பு... கருப்பு சட்டையில் ரஜினி!
Marina Kalaignar Memorial Inauguration: மெரினா கடற்கரையில், முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
Marina Kalaignar Memorial Inauguration: சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும், கருணாநிதியின் புதிய நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 26) மாலை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துரைமுருகன், எ.வ. வேலு, கே.என். நேரு, சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும், மக்களவை உறுப்பினர் டிஆர் பாலு, சென்னை மேயர் பிரியா என முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
கூட்டணி கட்சி தலைவர்களான வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்த திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டார். நினைவிடங்கள் திறக்கும்போது, மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அருகில் ரஜினிகாந்த் அமர்ந்திருந்தார்.
பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை திறந்துவைத்த முதலமைச்சர், அங்கு அவரின் முழு உருவ சிலையையும் திறந்து அதற்கு மரியாதை செலுத்தினார். அதேபோல், கலைஞர் கருணாநிதியின் புதிய நினைவிடத்தை திறந்துவைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து அதற்கும் மரியாதை செலுத்தினார். கூடவே, கலைஞரின் சிலையுடன் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கலைஞர் உலகம் திறப்பு
கருணாநிதி சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், 'கலைஞர் உலகம்' எனும் பெயரில் ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதனையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். கருணாநிதியின் எழிலோவியங்கள் எனும் அறையில், கருணாநிதியின் இளமைக் காலம் முதல் அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், படைப்புகள், போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப் படங்கள் இடம்பெற்றுள்ளன.
உரிமைப் போராளி கலைஞர், அரசியல் கலை அறிஞர் கலைஞர், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் என தனித்தனி அறைகளில் கருணாநிதி பெருமை மற்றும் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் புகைப்பட தொகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடமும், கருணாநிதியின் நினைவிடமும் பல ஆண்டுகள் வரை நம் நெஞ்சைவிட்டு என்றும் நீங்காமல் நம்மை ஆட்கொண்டிருக்கும் என்பது உறுதி என முன்பு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கலைஞர் நினைவிடத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட கட்டுமான பொறியாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
மேலும் படிக்க | அதிமுக கூட்டணி உறுதி எல்லாம் இல்லை - அன்புமணி ராமதாஸ் வைத்த டிவிஸ்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ