தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு
தமிழக முதலமைச்சர் இன்று மதியம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீரானது குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக குடியிருப்புகளை சுற்றியுள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த மழைநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் இன்று மதியம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ALSO READ: அதிமுகவில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்த சசிகலா
இதற்காக இன்று மதியம் தூத்துக்குடி விமான நிலையம் வந்து இறங்கிய அவர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியை பார்வையிட்டார்.
தொடர்ந்து அந்த பகுதியில் கூடியிருந்த பொதுமக்களிடம் மழை வெள்ள பாதிப்பு குறித்த குறைகளை கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் அதன் பின்னர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் பேருக்கு மழைக்கால நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர் பகுதிகளை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை முதலமைச்சர் பார்வையிடுட்டார்.
ALSO READ: தடுப்பூசி போடாதவர்கள் பொதுஇடங்களுக்கு செல்ல தடை - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR