சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி சென்றடைந்தார். இன்று மாலை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு மரணமடைந்த பிறகு, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் பிறகு, கடந்த, 12-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை, ‛வர்தா' புயல் தாக்கியது. புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக, 1,000 கோடி ரூபாய் வழங்கும்படி பிரதமருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். 


இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  இன்று விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்–அமைச்சராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்வது இதுவே முதல் தடவை ஆகும். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து அவரிடம் மனுவை வழங்கவுள்ளார். மேலும், மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், பார்லிமென்ட் வளாகத்தில் ஜெயலலிதா சிலையை வைக்கவும் பிரதமரிடம், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுப்பார் என்று தகவல் வெளியாகிள்ளது.