முதன் முறையாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் 68வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. மாநில கவர்னர் தேசியக் கொடியேற்றுவது வழக்கம். தமிழக மாநிலத்திற்கு தனி கவர்னர் இதுவரை நியமிக்கப் படவில்லை. மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் குடியரசு தினத்தன்று மராட்டிய மாநிலத்தில் தேசியக் கொடி ஏற்றுகிறார். எனவே இன்று தமிழகத்தில் நடந்த விழாவில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றினார்.


இன்று காலை 8:00 மணிக்கு தேசியக் கொடியேற்றி வைத்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். பிறகு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அரசு துறைகளின் சாதனைகளை விளக்கும் வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. குடியரசு தின விழாவையொட்டி கடற்கரை சாலை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.