தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல காவல் துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 3 லட்சம் வழக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது:-


சென்னை பெருநகரக் காவல், நந்தம்பாக்கம் காவல் நிலையசிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. மு. இன்பசேகரன் அவர்கள் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;


கோயம்புத்தூர் மாநகரம், சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. அ. கங்காதரன் அவர்கள் உடல்நலக் குறைவால்
காலமானார் என்ற செய்தியையும்;


காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவிஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. சிங்காரவேலு அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்;


விழுப்புரம் மாவட்டம், மதுவிலக்கு அமல்பிரிவில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த திரு. பா. விமலநாதன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்;


திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. நு. பாலு அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;


சென்னை மாவட்டம், பரங்கிமலை ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்ததிரு. சு. மதியழகன் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;


சென்னை பெருநகரக் காவல், புதுப்பேட்டை ஆயுதப்படை-1, 37_வது அணியில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு.கூ. இமானுவேல் கோயில் ராஜ் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;


தருமபுரி மாவட்டம், ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஆ. ராமகிருஷ்ணன் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. கா. சத்தியமூர்த்தி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்;


சேலம் மாநகரம், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஹ. வெள்ளையதேவன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்;


மதுரை மாநகரம், போக்குவரத்து திட்டமிடல் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ழு. ராஜசேகரன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்;


வேலூர் மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஞ. ரவிச்சந்திரன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்;


தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி ஆயுதப்படை 1-வது பிரிவு, காவலர் திரு.சி. சிவமுருகன் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;


காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த செல்வி புவனேஷ்வரி சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர மதுவிலக்கு அமல்பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. செந்தில்குமார் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.


மேற்கண்ட நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட பதினைந்து நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.


இவ்வாறு தனது அறிக்கையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.