மத்திய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாடமி நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதற்காக தொன்மைவாய்ந்த தமிழ் கலைகளை போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்க்கும் தமிழ்நாடு அரசு வழங்கும் வாழ்க்கையினை கொண்டு கலைஞர்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயல்படுத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 அதுபோன்று நாட்டுப்புறக் கலைகளின் பல்வேறு பரிமாணங்களை உணரும் வகையிலும் கலைகளை அழியாமல் பாதுகாப்பதற்கும் அவற்றில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து அவர்களின் வாழ்க்கையை வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் 2007ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி  தோற்றுவிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.


Also Read | முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர் கலைஞர்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்


இந்நிலையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து அதன் புதிய தலைவராக நடிகர் வாகை சந்திரசேகரை நியமித்துள்ளார். அத்துடன்  தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பையும் திரு சந்திரசேகர் அவர்களுக்கு கொடுத்துள்ளார்.


தமிழ் திரைப்படத்துறையில் தனது குணச்சித்திர நடிப்பின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருந்த நடிகர் வாகை சந்திரசேகர். கடந்த 1991 ஆம் ஆண்டு இவரது நடிப்பாற்றலை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது. மேலும் கடந்த 2003 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். 2016 முதல் 2011 வரை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


 அதோடு மட்டுமல்லாமல் 2023 ஆம் ஆண்டு 2003ஆம் ஆண்டு மத்திய அரசால் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாகை சந்திரசேகர் பெற்றுள்ளார் 1996 ஆம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராகவும் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் அத்தோடு வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு 2016 முதல் 2011 வரை அந்த தொகுதி மக்களுக்கு எண்ணற்ற மக்கள் நலப் பணிகளை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Vairamuthu lauds MK Stalin: பெரியாரின் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின் - வைரமுத்து


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR