விவசாயத்திற்க்காக வைகை அணையிலிருந்து நீர் திறந்து விட முதல்வர் உத்தரவு
நாளை முதல் 45041 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறும்வகையில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
நாளை முதல் 45041 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறும்வகையில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இதுக்குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45041 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45041 ஏக்கர் நிலங்களுக்கு, நாள் ஒன்றுக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறைவைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கனஅடி தண்ணீரினை இருப்பைப் பொருத்து 28.6.2018 முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையில் கூறியுள்ளார்.