ஆளுநரை வரவேற்க வராத கல்லூரி மாணவர்கள்,தேர்வு எழுத முடியாது - ஆடியோ வைரல்
ஆளுநரை வரவேற்க வராத கல்லூரி மாணவர்கள்,தேர்வு எழுத முடியாது என்று தனியார் கல்லூரி முதல்வர், மாணவ மாணவிகளை மிரட்டும் வாட்ஸ் அப் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிய சம்பவம், நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;
தமிழக ஆளூநர் ஆர்.என்.ரவி இன்று நாகை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தருகிறார். ஆளுநரை வரவேற்பதற்காக, நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரியின் முதல்வர் இளவேந்தன், ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் இன்று காலை வரவேண்டும் என வாட்ஸ் அப் மூலம் நேற்று தகவல் தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க | கொள்ளையடித்ததை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு பயணம் - எடப்பாடி பழனிசாமி
அதில்...மாலை நடைபெறும் நிகழ்ச்சிக்கு அதிகாலை 6.30 மணிக்கே வர வேண்டும் என்றும், வராமல் ’கழுத்தை அறுத்தால்’ அதன் பாதிப்பை வாழ்நாள் முழுவதும் சந்திப்பீர்கள் எனவும் பேசியிருந்தார். இந்நிலையில் இன்று கல்லூரிக்கு மாணவ மாணவிகள் குறைந்த அளவிலேயே வந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமற்ற கல்லூரி முதல்வர் இளவேந்தன் மீண்டும் ஒரு ஆடியோவை மாணவ மாணவிகளுக்கு அனுப்பி உள்ளார்.
அதில் தற்போது 6;30 மணி வரை மாணவ மாணவிகள் வராமல் கல்லூரி வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே கல்லூரிக்கு வராத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுத முடியாது, வருகை பதிவேட்டில் கை வைப்பேன் என மிரட்டல் விடுக்கும் ஆடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | நாடாளுமன்ற தேர்தலில் இம்முறை யாரோடு கூட்டணி? சூசகமாக சொன்ன கொங்கு ஈஸ்வரன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ