சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2775 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3188.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 32,307 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிடால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது.


அதில் இணை நோய்கள் இல்லாத 9 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 51வது நாளாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  


ALSO READ | கொரோனா 3வது அலை: அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடையும்


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே மாத இறுதியில் இருந்து நோய் தொற்று குறையத் தொடங்கியது. மே 30-ந் தேதியன்று தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது.


அதன்பிறகு ஜூன் மாதம் முதல் தினசரி பாதிப்பு குறைந்து கொண்டே வந்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததுடன், தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டது. இப்படி பல காரணங்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக சரிந்தது.  


Also Read | CORONA VACCINE போட்டுக்கொண்ட 3 நாட்களுக்கு உடலுறவு கூடாது – மருத்துவ வல்லுநர்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR