சென்னை-சேலம் நெடுஞ்சாலை திட்டத்திற்கு எதிராக வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று சிபிஐ-யின் தமிழக யூனியன் அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை-சேலம் நெடுஞ்சாலை திட்டத்திற்கு எதிரான ஆர்பாட்டம் குறித்து கட்சியின் மாநில கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த ஆர்பாட்டமானது திருவண்ணாமலையில் துவங்கி சேலம் வரை நடைபெறும் என்று கட்சி செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது... "8 வழி சாலை திட்டத்திற்கு நிலங்களை வழங்க மறுத்த விவசாயிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவளிக்க அரசியல் கட்சிகள் மற்றும் பிற உரிமை அமைப்புகளின் முயற்சிகள் கைது மற்றும் தாக்குதல்களால் முடக்கப்படுகிறன" இதனை கண்டிக்கும் வகையில் இந்த ஆர்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த திட்டம் குறித்து தெரிவித்த அவர்... பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உட்பட பல கட்சியினராலும் விமர்சிக்கப்பட்ட திட்டமானது இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


மாநில அரசு மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு எதிராக "ஆத்திரமூட்டல்" அறிக்கையை தயாரித்ததற்காக, தமிழ்நாடு ஆம் ஆட்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எஸ். ஏ. என். வசீகரன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.


பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த திட்டத்தை ஆதரித்துள்ளார். இந்த திட்டம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரான திட்டமாகும், எனவே இத்திட்டத்தினை தமிழக அரசு கைவிடவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.