COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள் மனோன்மணி(29). இவருக்கும் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை சேர்ந்த அரவிந்த்(32) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. தண்ணீர் லாரி உரிமையாளராான அரவிந்துக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணமான இரண்டு மாதத்திலேயே குடும்ப தகராறு காரணமாக மனோன்மணி பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். கணவர் மிகவும் டார்ச்சர் செய்வதால் இனி கணவனுடன் வாழமாட்டேன் என்று கூறி பெற்றோர்களுடன் இருந்துள்ளார்.


இந்நிலையில், தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த மனோன்மணி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


மனோன்மணி மருத்துவமனையில் இருக்கும் போது கணவரின் சித்திரவதை குறித்து பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் தனது கணவர் அரவிந்த் தினமும் மது அருந்திவிட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதும், இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்து செய்து வந்ததும், தனக்கே தெரியாமல் தனக்கு ஊசிகள் போட்டு மயக்கம் அடைய செய்து, ஆடைகளை கிழித்து சித்ரவதை செய்துவந்ததாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறி உள்ளார். 



இது தொடர்பாக மனோன்மணியின் தம்பி ராஜேந்திரன் கூறுகையில், திருமணமான இரண்டு மாதத்தில் பலமுறை அடித்து கொடுமைப்படுத்தி தாகவும், மேலும் நகை கேட்டு அடித்து விரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். திருமணத்தின் போது வரதட்சனையாக கொடுத்த 35 சவரன் நகை மற்றும் ஒருலட்சம் ரொக்கம் பணத்தை கேட்டபோது தரமறுத்துவிட்டனர் என்றார்.


மேலும் படிக்க | மேட்டூர் அணையில் நீர் வெளியேறும் அளவு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆகா உயர்வு! 
  
அரவிந்த் சைக்கோ போன்று நடந்து கொண்டதாகவும், தொடர்ந்து அடித்து கொடுமைப்படுத்தி வந்ததால் தனது சகோதரி தாய்வீட்டிற்கு வந்துவிட்டார். கணவர் மனமாறி சகோதரியை அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்து இருந்ததால். இது தொடர்பாக புகார் அளிக்கவில்லை என்றார். தற்போது, மனோன்மணி இறந்ததையடுத்து, போலீசார் முறையான பிரிவில் வழக்கு பதிவு செய்யாத்தால் சடலத்தை வாங்க மறுத்துவிட்டோம் என்றார்.


மேலும் படிக்க | தங்கையின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் - காருக்கு தீ வைத்த பயங்கரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ