சென்னை: அரசுமுறை வெளிநாட்டு பயணம் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28 ஆம் தேதி தமிழகத்தில் இருந்து வெளிநாடு புறப்பட்டு சென்றார். முதலில் இங்கிலாந்து சென்றார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர், நேற்று துபாயில் சென்றார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 15 பேர் கொண்ட குழுவும் சென்றது. 


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அந்தந்த நாட்டின் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை ஏற்ப்படுத்தி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் என மூன்று நாடுகளில் உள்ள தொழில் நிறுவனத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட விருப்பம் தெரிவித்தனர். மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


அதாவது இந்த மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன பயனாக தமிழ்நாட்டில் ரூ.8,830 கோடி முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும் லண்டனில் செயல்பட்டு வரும் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சென்னையில் அமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறது. 


இந்தநிலையில், தனது 14 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குழு, இன்று அதிகாலை தாயகம் திரும்பினார்கள். தமிழகம் திரும்பிய முதல்வருக்கு விமான நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்ப்பை அளித்தனர். அப்பொழுது முதல்வரை வரவேற்க்க தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவில்லை. அரசியல் வட்டாரத்தில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.


இதனையடுத்து இன்று காலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திற்கு சென்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். தமிழகத்திற்கு அதிக அளவில் முதலீடுகள் செய்ய ஒப்பந்தங்கள் போட்டு தாயகம் திரும்பிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.