சென்னை: எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பு உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது. டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கூட்டணி நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமமுக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.  இந்த பொதுக்கூட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாவுதீன் ஒவைசி, எஸ்டிபிஐ தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் கலந்துக் கொண்டனர். 


கூட்டணிக் கட்சியினரின் முன்னிலையில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.



தேர்தல் அறிக்கையில் அமமுக பல வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது. வீட்டிற்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு, மதுபான ஆலைகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்றும் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் அமமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


30 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அமமுக தலைமையில் தமிழக தேர்தலில் போட்டியிடும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாவுதீன் ஒவைசி உரையாற்றினார். 



தேசிய கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு தமிழகத்தில் வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். தற்போது அதிமுக ஜெயலலிதாவின் கட்சியல்ல என்று தாக்கிப் பேசினார். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் அண்ணா காட்டிய வழியில் இருந்து மாறிவிட்டதாக குற்றம் சாட்டிய ஓவைசி, பிரதமர் மோடியின் வழியில் தான் இரண்டு கட்சிகளுமே சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். எனவே, அந்த கூட்டணி வெற்றி பெற்றால் சிறுபான்மையின மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்றார்.


Also Read | Maruti Cars பம்பர் தள்ளுபடி, ஒவ்வொரு மாடலிலும் மாபெரும் சேமிப்பு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR