நாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு தொடர்ந்து மாலை 6 மணி வரை நடைபெற்றது. சில தொகுதிகளில் இரவு 8 மணி வரை நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பதிவான வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் தொடர்ந்து தகவல் வெளியிட்டு வந்தது. அதன்படி மக்களவைத் தேர்தலில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று, சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இரவு 9 மணி வரை 71.62 சதவீத வாக்குகள் பதிவானது.


இன்று காலை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் 38 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் இன்று மாலை வெளியிடப்படும் என தெரிவித்தார். 


இந்தநிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை அறிவித்தார். அதன்படி,


மக்களவை தேர்தல்:-


> தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 71.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.


> மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 80.49 சதவீத வாக்குபதிவு.


> மக்களவை தேர்தலில் குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 56.34 சதவீத வாக்குபதிவு.


இடைத்தேர்தல்:-


> தமிழகத்தில் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 75.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.