சென்னை அண்ணாநகர் கிழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்கினை வேறொரு பதிவு செய்திருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அரசு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது தெளிவாக தெரிவதாக புகார்களை அடுக்கிய அவர், ஆளும்கட்சிக்கு ஆதரவாக பல இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும், மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் வாக்கு செலுத்தப்பட்டது குறித்து மாநில தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா? என்றும் அவர் வினவினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Tamil Nadu Local Body Election: தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவும், தலைவர்களின் கருத்தும்


இதனையடுத்து விசாரணையில் இறங்கிய தேர்தல் ஆணையம், எல்.முருகனின் வாக்கு குறித்த தகவல்களை சேகரித்தது. அதில், அவரது வாக்குச்சாவடியில் முருகன் என்ற பெயரில் வேறொருவர் இருப்பது தெரிய வந்தது. எழுத்துப் பிழையால் இந்த குழப்பம் ஏற்பட்டதை கண்டுபிடித்த மாநில தேர்தல் ஆணையம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கை யாரும் பதிவு செய்யவில்லை என்பதை உறுதி செய்தது. 



இது குறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், எழுத்துப்பிழையால் ஏற்பட்ட குழப்பம் கண்டுபிடிக்கப்பட்டு, சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் வாக்கை யாரும் செலுத்தவில்லை என கூறியது. இதனைத் தொடர்ந்து அண்ணாநகர் கிழக்கில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்ற எல்.முருகன், தனது வாக்கினை பதிவ செய்தார். இதனால், கள்ள ஓட்டு சர்ச்சை முடிவுக்கு வந்தது. 


மேலும் படிக்க | நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வீழ்ச்சி அடைவது உறுதி: ஜெயக்குமார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR