தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 12,838 ஆகும். இந்த வார்டுகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
வேட்புமனு பரிசீலனையில் 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில்,14,324 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 218 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழிசை சௌந்தரராஜன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அமைச்சர் கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இன்று வாக்களித்தனர்.
மேலும் படிக்க | LIVE நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வாக்குப்பதிவு மும்முரம்
இந்த நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள ஸ்ரீராஜலட்சுமி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், தற்போதுவரை வாக்குபதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது மதியம் 2 மணிக்கு மேல் திமுக தனது ஆட்டத்தை கட்டவிழ்க்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வாக்குப்பதிவு முடியும் வரை அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து வார்ட்டுகளிலும் பரிசு பொருள் பண விநியோகத்தை அமோகமாக நடத்தியிருக்கிறது திமுக, அதிமுக -விற்கு பணத்தின் மீது நம்பிக்கை இல்லை, 9 மாத திமுக ஆட்சிக்கு பதில் சொல்லும் விதத்தில் மக்கள் மெளன புரட்சி நடத்தி அதிமுக-விற்கு அமோக ஆதரவு வழங்கி வருகிறார்கள்.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் கொள்ளையடித்த 500 கோடி, ஆட்சி தொடங்கியது முதல் கொள்ளையடித்த 1000- கோடி என ரூபாயை திமுக செலவிட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் திமுக தேர்தல் விதிகளை மீறியுள்ளது வாக்குப்பதிவு நிலைய முகவர்கள் மிரட்டப்படுகிறார்கள். திமுக என்ன செய்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி, அவர்கள் வீழ்வது உறுதி.
தொடர்ந்து பேசிய அவர், கோவையில் குண்டர்களை வைத்து திமுக அடாவடி செய்துவருகிறது அதிமுக புகார் அளித்த பிறகு சில குண்டர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். கோவையில் குண்டர்கள் யாரும் இல்லை என முதல்வர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. 9 மாதங்கள் மக்கள் பட்ட துன்பங்கள் இன்று வாக்குகளாக வெளிபடும் என அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | காலம் மாறுகிறது காற்று பாஜக பக்கம் வீசுகிறது - குஷ்பூ சிறப்புப் பேட்டி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR