TN Election Result 2021: தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பின்னடைவு
காலையில் இருந்து தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன், தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மதியம் 3.15 மணி நிலவரப்படி, திமுக 149 தொகுதிகளும், அதிமுக 84 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் அடிப்படையில் பார்க்கும் போது திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெளிவாகத் தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆரம்ப முதலே பின்தங்கி இருந்த பாஜக வேட்பாளர்கள், தற்போது நான்கு பேர் முன்னிலை வகிக்கின்றனர்.
காலையில் இருந்து தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன், தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். அதே தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 1,166 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
அதாவது தாராபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் முன்னிலையில் இருந்த நிலையில், 14வது சுற்று முடிவில் பின் தங்கியுள்ளார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR