தேர்தல் நெருங்க நெருங்க, தமிழகத்தின் இரு திராவிட கட்சிகளும் இலவசங்களை அள்ளி வீசி வருகின்றன. இதில் அதிமுக, திமுக ஆகிய இரு கழகங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று, திமுக (DMK) கட்சி, குடும்பத்தலைவிக்கு மாதம் ₹1000 கொடுப்போம் என வாக்குறுதி அளித்த நிலையில், இன்று அதிமுக குடும்பத் தலைவிக்கு ₹1,500 கொடுப்போம் என வாக்குறுதி அளித்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு கடன்களை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இன்று, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (ADMK) தலைமை அலுவலகத்தில் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம். குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ₹1500 வழங்கப்படும். ” என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.


மேலும் அதிமுகவின் (ADMK) தேர்தல் அறிக்கையில் இருப்பதை அறிந்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.


ஏற்கனவே, மாதம் ₹1000 கொடுப்பதற்கு, சுமார் 24,000 கோடி தேவைப்படும் என கூறப்பட்ட நிலையில், இப்பொழுது ₹1500 என்றால் ₹36,000 கோடி தேவைப்படும் என கூறப்படுகிறது. 
ஏற்கனவே பல லட்சம் கோடி கடனில் உள்ள தமிழகம், இதனை எப்படி சமாளிக்க முடியும், திவால் ஆகும் நிலை தான் ஏற்படும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


ALSO READ | Temples: கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்கள்- சத்குரு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR