சென்னை: வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆறு இடங்களுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை AIADMK வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
எடப்பாடி தொகுதியில் இருந்து தேர்தலில் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi Palaniswami) போட்டியிடுவார், போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியிட உள்ளனர். தமிழக சட்டமன்ற (TN Assembly Election) தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ALSO READ | சசிகலாவின் பலகோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்: காரணம் சட்டமா? சதியா?
இதையடுத்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் என ஒருபுறமும், விருப்ப மனு தாக்கல், நேர்காணல், ஆலோசனை என மறுபுறமும் பிசியாக வேலை செய்து வருகின்றனர். அதிமுகவில் (AIADMK) கடந்த மார்ச் 3ம் தேதி விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று எடப்பாடியாருக்கு ஐந்தாவது எண் ராசி என்பதால் ஐந்தாம் தேதி 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறார்.
அதிமுக முதல் கட்ட வேட்பாளர் மற்றும் தொகுதி விவரம்:
1. போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
2. எடப்பாடி தொகுதி - எடப்பாடி கே.பழனிசாமி
3. ராயபுரம் - ஜெயக்குமார்
4. விழுப்புரம் - சி.வி.சண்முகம்
5. திருவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன், எம்.எல்.ஏ.,
6.நிலக்கோட்டை (தனி) - எஸ்.தேன்மொழி, எம்.எல்.ஏ., ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR