பொறியியல் படிப்பின் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடத்தி வருகிறது. நடப்பாண்டின் பொறியியல் கலந்தாய்வு, ஜூலை 17-ம் தேதி தொடங்கியது.


பொதுக் கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி ஆரம்பித்தது. 19 நாட்கள் முடிவில் 83,562 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மாணவர்கள் அதிகபட்சமாக மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்துள்ளனர்.


கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், இதுவரை 46,818 பேர் பங்கேற்கவில்லை. தற்போது வரை 91,894 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.


அண்ணா பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான இடங்கள் நிரம்பிய நிலையில், தனியார் கல்லூரிகளில் 50% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 


இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.