தமிழக விவசாயிகள் 23-வது நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று டெல்லியில் சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் தங்கள் கைகள் மற்றும் கால்களை கயிற்றால் கட்டிக் கொண்டு தரையில் உருண்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 


போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சுட்டெரிக்கும் வெயிலில் தரையில் உருண்டதால் போராட்ட சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு மற்றும் பழனிசாமி இருவரம் திடீர் என மயக்கம் அடைந்தனர்.இருவரையும் அருகிலுள்ள ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.


நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தமிழகம் மற்றும் தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து தம் ஆதரவைத் தெரிவித்தபடி உள்ளனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தபடி வருகின்றனர். 


கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.