வடமாநிலத்தவர்கள் இல்லாததால் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு!
வடமாநிலத்தவர்கள் ஊருக்கு கிளம்புவதன் எதிரொலியால் ஒசூர் பகுதிகளில் மலர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு.
வடமாநிலத்தவர்கள் ஊருக்கு கிளம்புவதன் எதிரொலியால் ஒசூர் பகுதிகளில் மலர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க | 'திராணியில் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்...' ஸ்டாலினை சீண்டும் அண்ணாமலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் தொழிற்சாலைகள், விவசாயம்,கூலி என பல்வேறு வேலைகளில் அதிகமான வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது வதந்தி காரணமாக ஒசூர் பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தவர்கள் அச்சத்தில் அவர்களும் கிளம்ப தொடங்கியிருப்பதால் ஒசூர் பகுதியில் 90% வடமாநில தொழிலாளர்களை நம்பி ரோஜா,கார்னேசன்,கிரசாந்தம், ஜிப்சோ,ஜர்பரா போன்ற மலர் வகைகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பசுமை குடில்கள் மூலம் உற்ப்பதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊர்களுக்கு படையெடுத்ததால் மலர்களை அறுவடை செய்ய முடியாமலும், செடிகளுக்கு நீர் பாய்ச்சக்கூட ஆள் இல்லாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் மலர்கள் செடியிலேயே நாசமாவதுடன் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஒரே நாடு, ஒரே கல்வி என ஒரே சாப்பாடு என்ற நிலை ஏற்படும் - அமைச்சர் பொன்முடி பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ