சென்னை: தமிழகத்தில் வரவிருக்கும் 13 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, கடந்த அ.தி.மு.க ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டுள்ளார். வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்காக முக்கிய காரணங்களையும் தமிழக நிதியமைச்சர் வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்களைப் பற்றி இங்கே காணலாம்:


"வெள்ளை அறிக்கை வெளியிடுவது திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்காக அல்ல... வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்!" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.


- கடந்த 5 ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


- 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17ஆயிரம் கோடியாக இருந்தது.


- 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50லட்சம் கோடியாக உயர்ந்தது.


- தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது.


- மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி 33% குறைந்துவிட்டது.



- கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வரி வருவாய் வளர்ச்சி 4.4% கீழ் நோக்கி சென்றுள்ளது. 


- தமிழகத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது.


- தமிழகத்தின் வரி வருவாயிலும் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. 


- மதுபான வரி கலால் வரியாக எடுக்கப்படாமல் வாட் வரியாக எடுக்கப்பட்டதால் பெரிய அளவில் வரி வருவாய் சரிவு. 


- கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு வருவாய் பற்றாக்குறை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. 


- மின்துறையில் கடன் அளவு அபாய கட்டத்தின் உள்ளது.


- 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


- இதன் காரணமாக மின்வாரியத்தின் கடனை திருப்பிச்செலுத்தும் தன்மை குறைந்து வட்டி அதிகரித்து விட்டது. 


- தமிழக அரசுக்கான மொத்த வருமானம் 4-ல் ஒருபங்கு குறைந்துவிட்டது.


- பூஜ்ஜிய வரியால் ஏழைகளுக்கு எந்தப் பயனும் கிடையாது. இதனால் பணக்காரர்கள் தான் பயனடைவார்கள். 


- உள்ளாட்சித் தேர்தலை சரியான நேரத்தில் தமிழக அரசு நடத்தாததால் தமிழக அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு


- அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை சரியான நேரத்தில் நடத்தாததால் தமிழக அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


- சமூக நல திட்டங்களுக்கான மானியங்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்று சேர்ந்ததா என்பதை தெரிந்துகொள்ள எந்த தரவுகளும் இல்லை. 


இன்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை முதல் வெள்ளை அறிக்கை தான், இறுதி வெள்ளை அறிக்கை இல்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR