தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், பொன்வண்ணன், கோவை சரளா, பசுபதி ஆயியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.


நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவரகள் கலைத் துறைக்கு ஆற்றிய சேவையை போற்றிடும் வகையில் அவரது பிறந்த தினமான அக்டோபர் 1-ஆம் நாளினை ஆண்டுதோறும் அரசு கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார்.


மேலும் அரசு பொருட்காட்சிகளில் நடத்தப்படும் விழிப்புணர்வு நாடகங்களுக்கு வழங்கப்படும் மதிபூதியத்தை 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார் முதல்வர். இந்நிலையில் இந்த அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று நடிகர் சங்க நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.



இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்தப் பின் பேட்டியளித்த நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்ததாவது.. சிவாஜி மணிமண்டபத்தில் நாடக பயிற்சி அரங்கம், நலிவடைந்த நாடக கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.


இந்நிகழ்வின் போது விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் வெங்கடேசன், மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.