தமிழகத்தை போல புதுச்சேரியிலும் தீபவாளிக்கு மறுநாள் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இதற்காக தங்களது சொந்த ஊருக்கு செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் அடுத்த நாளான 28 ஆம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்தால் நல்லது என பலதரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.


இதை தொடர்ந்து, இந்த கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் உள்ள, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், உள்ளூர் விடுமுறை அளித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர், 9, பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 28ம் தேதி, அவசர அலுவல்களை கவனிக்க, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட, தகுந்த ஏற்பாடு செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 


இதை தொடர்ந்து, தீபாவளி பண்டிகை தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமைச்செயலருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் நாராயணசாமி, தீபாவளி பண்டிகையொட்டி வரும் 28 ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். 28 ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 9 ஆம் தேதி வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.