தமிழ் வழியில், அரசு பள்ளியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு  (வெள்ளிக்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், ஆளுநர் உரையில், இது குறித்து குறிப்பிடுகையில் “தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” என்று ஆளுநர் அறிவித்திருந்தார்.


அதன் பின்னர், நடந்த மானியக் கோரிக்கை மீதான கூட்டத் தொடரில் உரையாற்றிய மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொரோனா தொற்று காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்ற நபர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்த்திருந்தார்.


READ ALSO | ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை? உறவினர்கள் குற்றச்சாட்டு


வேலைவாய்ப்பு மையங்கள் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இந்த இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனா தொற்று காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை நடைமுறைக்கு வருகிறது.


மேலும், போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், கணவனை இழந்தவர்கள், சாதி மறுப்பு திருமண தம்பதியர் ஆகியோருக்கும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அமலாகிறது. 


கல்லூரிகளில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழ் வழியில் படித்ததற்கான கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பிறகே இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 


ALSO READ | ட்விட்டரில் மாணவருக்கு பதிலளித்த கலெக்டர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR