Molnupiravir: கொரோனா சிகிச்சைக்கான முதல் மருந்து; விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!!

மும்பையை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனம் விரைவில் இந்தியாவில் 'Molxvir' என்ற பிராண்டின் மோல்னுபிராவிர் (Molnupiravir) மாத்திரையை அறிமுகப்படுத்த உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 12, 2021, 02:45 PM IST
Molnupiravir: கொரோனா சிகிச்சைக்கான முதல் மருந்து; விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!! title=

மும்பையை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனம் விரைவில் இந்தியாவில் 'Molxvir' என்ற பிராண்டின் கீழ் மெர்க் ஷார்ப் டோம் ( Merck Sharp Dohme) மற்றும் ரிட்க்ர்பேக்கின் (Ridgrback’s) மோல்னுபிராவிர் (Molnupiravir) மாத்திரையை அறிமுகப்படுத்த உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு மாத்திரையான மோல்னுபிரவீர் கொரோனா தொற்று நோயின் பாதிப்பையும் இறப்பையும் குறைக்கும் என்று, மருந்தை தயாரித்த மருந்து நிறுவனமான மெர்க் (Merck)கூறியுள்ள நிலையில், இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளரான, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI), தற்போது பெரியவர்களுக்கு சிகிச்சைக்காக கோவிட் எதிர்ப்பு மாத்திரை வழங்கப்பட்டது தொடர்பான  மருத்துவத் தரவுகளை மதிப்பாய்வு செய்து வருகிறது.

மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் வியாழக்கிழமை  அன்று தெரிவித்துள்ளது. மோல்னுபிரவீர் (Molnupiravir), கொரோனா (Corona) தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், அவர்கள் உயிரை காப்பாற்றுவதிலும் பெரிதும் உதவும் எனவும், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறும் வாய்ப்பை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ALSO READ | ZyCov-D: இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணி விரைவில்..!!

பெரியவர்களிடையே லேசான முதல் மிதமான COVID-19 நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக Molnupiravir மருந்தை ஏற்கனவே UK மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை முகமையால் (MHRA) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான (EUA) அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) மதிப்பாய்வில் உள்ளது. வாய்வழியாக உட்கொள்ளப்படும் மோல்னுபிரவீர், SARS CoV 2 (COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்) உடலில் பெருகும் திறனைக் குறைக்கிறது.

இதற்கிடையில், இந்தியாவில் 12,516 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதனால் நாட்டின் மொத்த கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 3,44,14,186 ஆகக் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஆக்டிவ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 1,37,416 ஆகக் குறைந்துள்ளது. இது 267 நாட்களில் மிகக் குறைவு. 501 புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 4,62,690 ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ | பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News