பள்ளி படிப்பினை முடித்த மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று தெரிவிக்கையில்...


பள்ளி படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் அளிக்க 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்கிற அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


அதன்படி 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் தொடர்பான அரசாணையில் திருத்தம் செய்து உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 1200 மதிப்பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.


இந்த திருத்தத்தின்படி பள்ளி படிப்பினை முடித்த மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.


மேலும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 600 மதிப்பெண் என்ற அடிப்படையில் சான்றிதழ் அளிக்கப்படும்.


11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் வரை மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.