சென்னை: பொங்கள் பண்டிகையினை முன்னிட்டு ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு (Jallikattu) போட்டிகள், இந்த இந்த ஆண்டும் பல இடங்களில் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி 17 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதேபோல பாலமேடு மற்றும் அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டு போட்டிகள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டம் தான். அந்த மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை ஜனவரி 15 முதல் 31 ஆம் தேதி வரை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அழித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.


அதேபோல முன்னதாக, பாலமெடு மற்றும் அலங்கநல்லூரில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 21 வயதுக்குக் குறைவானவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்திருந்தார். 


அதேபோல போட்டியில் பங்கேற்க விரும்புவோர் நியமிக்கப்பட்ட மையங்களில் தங்களை பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் தேவையான சுகாதார பரிசோதனைக்குப் பிறகு உடற்பயிற்சி சான்றிதழைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 


பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், காளை உரிமையாளர்கள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக உள்ள ஜல்லிக்கட்டுக்காக தங்கள் மந்தைக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளனர். காளைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது மற்றும் ஆண்டு முழுவதும் பந்தயத்திற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. 


அதேவேளையில் ஜல்லிக்கட்டு திருவிழா வேகமாக நெருங்கி வருவதால் காளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகையின்போது தமிழகம் முழுவதும் பல்வேறு ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் சுமார் 2,000 காளைகள் பங்கேற்க வாய்ப்புள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.