சென்னை: ஊரடங்கு காலத்தில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மூன்று தவணைகளில் கட்டணம் வசூலிக்க அனுமதித்ததாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு (Madras High Court) தமிழக அரசு (TN Govt) அறிவித்த ஒரு நாள் கழித்து, பெற்றோரின் ஒரு பகுதியினர் இன்று (வெள்ளிக்கிழமை) அரசின் அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினர். பெற்றோருடன் கலந்தாலோசிக்காமல் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் பெற்றோர்கள் மனுவில் கூறியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா ஊரடங்கு (Pandemic lockdown period) காலத்திற்கான கட்டணங்களை வசூலிக்க அனுமதிக்கக் கோரும் தனியார் பள்ளிகள் (TN private schools) மற்றும் கல்லூரிகளின் வழக்கை அவசர வழக்காக விசாரித்து வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் (Madras High Court) விசாரணைக்கு வந்தது.


READ MORE | தேர்வை தவறவிட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி தேர்வு!


நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட் 2020, டிசம்பர் 2020 மற்றும் ஏப்ரல் 2021 ஆகிய மாதங்களில் மூன்று தவணைகளில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (TN private colleges)  கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாக அரசு வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


பெற்றோர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் (Advocate M Purushothaman) தரப்பில், ஊரடங்கு காரணமாக அவர்களின் நிதிநிலை முற்றிலுமாக பாதித்துள்ளது என்றும் அவர்கள் ஊழியர்களுக்கு பணம் செலுத்த முடியவில்லை என்றும் தனியார் நிறுவனங்கள் கூறியது ஏற்றுக்கொள்ள முடியாதது.


அவர் மேலும் கூறுகையில், "மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (Central Board of Secondary Education) சட்டங்களின்படி, அரசு சாரா கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் 15 சதவீதத்தை ரிசர்வ் நிதியாக பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்கப்படும் இருப்பு நிதிகள் அவசரகால நேரத்தில் மட்டுமே செலவிடப்பட வேண்டும். இதுவே ஊழியர்களின் சம்பளத்தை வழங்க போதுமானது" என்றார்.


READ MORE | ஊரடங்கு நேரத்தில் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்த முடியாது: துணை முதல்வர்!


கொரோனா (Corona Lockdown) பொது முடக்கம் காரணமாக மாணவர்களின் பெற்றோர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அரசாங்கம் ஒரு முடிவை எடுத்துள்ளது என்று புருஷோத்தமன் வாதிட்டார்.


வீடியோ மாநாட்டில் நடந்த வழக்கு விசாரணை குறிப்பைப் பதிவுசெய்த நீதிபதி, மனுக்களைத் தொகுத்து, மேலும் விசாரணைக்கு மனுவை ஜூலை 17 க்கு ஒத்திவைத்தார்.