'கஜா' புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது. வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 19.11.2018 அன்று பத்திரிகைகளின் வாயிலாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, தமிழ்நாட்டில் ’கஜா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஏற்கனவே 33 கோடியே 66 லட்சத்து 80 ஆயிரத்து 583 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


  • 29.11.2018 அன்று கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான திரு.முக்கூர் என்.சுப்பிரமணியன் அவர்கள் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்பாளருமான திரு.கே. செல்வராஜ் அவர்கள் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளரும், செய்தி தொடர்பாளரும் மற்றும் முன்னாள் அமைச்சருமான திருமதி எஸ். கோகுல இந்திரா அவர்கள் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • 30.11.2018 அன்றுVellore Institute of Technology வேந்தர் டாக்டர் ஜி. விஸ்வநாதன் அவர்கள் 1 கோடியே 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • PA Footwear Pvt. Ltd., நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எஸ்.வி. குமரகுருபரசாமி அவர்கள் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை. 

  • கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.ராம.ராமநாதன் அவர்கள் 23 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • Clarion President Hotel தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ஏ. அபுபக்கர் அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • Ponpure Chemicals India Pvt. Ltd., நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.எம். பொன்னுசாமி அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • Bharat Matrimony  நிறுவனத்தின் Operating Officer திரு.சங்கர நாராயணன் அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்பாளர், தலைமைக் கழக பேச்சாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கோ.சமரசம் அவர்கள் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே. குப்பன் அவர்கள் 1 லட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலை.

  • 1.12.2018 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு.ப.மோகன் அவர்கள் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை. 


மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் இன்று (3.12.2018) நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்.


  • சட்டப் பேரவைத் தலைவர் திரு.ப.தனபால் அவர்கள், சட்டப் பேரவைத் லைவர், அரசு தலைமைக் கொறடா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் ழக சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் நியமன உறுப்பினர் ஆகியோரது ஒரு மாத சம்பளத்தின் மொத்தத் தொகை ரூ.86,62,500/-க்கான காசோலை.

  • மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு.டி.ஜெயகுமார் அவர்கள், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக 1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • சுந்தரம் பைனான்ஸ் நிறுவன குழுமத்தின் தலைவர் திரு.எஸ்.விஜி அவர்கள் 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர்.திரு.சு.சேதுராமன் அவர்கள் ரூபாய் 1 கோடியே 33 இலட்சத்து 10 ஆயிரத்து 543 ரூபாய்க்கான காசோலை.

  • லூகாஸ் டி.வி.எஸ். லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.கூ.மு.பாலாஜி அவர்கள் 1 கோடி ரூபாய்க்கான காசோலை.

  • சிங்கப்பூர் Haniffa Pte. Ltd நிறுவனத்தின் தலைவர் திரு.ஓ.கே.முகமது ஹனீபா அவர்கள் 1 கோடி ரூபாய்க்கான காசோலை. 

  • அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் திரு. அக்ரி சின்னுசாமி, திரு.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலை. 

  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் அவர்கள், கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை. 

  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் திரு.எஸ்.ஆறுமுகம் அவர்கள், மத்திய மாவட்டக் கழகத்தின் சார்பில், 10 லட்சத்து 95 ஆயிரத்து 200 ரூபாய்க்கான காசோலை. 

  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.வாலாஜாபாத் ப.கணேசன் அவர்கள், மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • Southern Region Bulk LPG Transport Owners Association தலைவர் திரு.எம்.பொன்னம்பலம் அவர்களும், நிர்வாகிகளும் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை. 

  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன் அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை. 

  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சோழிங்கநல்லூர் கிழக்குப் பகுதி கழக செயலாளர் திரு.லியோ என்.சுந்தரம் அவர்கள் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக காஞ்சிபுரம் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் திரு.ஆர்.சுப்ரமணியன் அவர்கள் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை. 

  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில், மத்திய மாவட்ட மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி.மரகதம் குமாரவேல் அவர்கள் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை. 

  • ஓய்வு பெற்ற நீதிபதி திரு.பி.ராமலிங்கம் அவர்கள் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 


என இன்று மட்டும், தமிழக முதல்வர் அவர்களிடம், ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 8 கோடியே 53 லட்சத்து 93 ஆயிரத்து 243 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து, இதுவரை வழங்கப்பட்ட தொகை 48 கோடியே 65 லட்சத்து 77 ஆயிரத்து 345 ரூபாய் என தமிழக அரசின் அறிக்கை தெரிவிக்கின்றது.