போக்குவரத்துத் துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சென்னை, சேப்பாக்கம்அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் இன்று தொடங்கி வைத்து, பின்னர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டார். இந்த பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடங்கி பேரணி, தீவுத்திடலில் நிறைவு பெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடை பேரணி இங்கே நடைபெறுகிறது. 19 போதிலிருந்து 32 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகம் சாலை விபத்தில் பாதிக்கப்படுகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 'இதுதான் மரபு...' ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு அப்பாவு விளக்கம் - முழு விவரம்


சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடக்கிறது. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களை காப்பாற்ற இன் உயிர் காப்போம் என்ற மகத்தான திட்டத்தை ஏற்படுத்தி, உயிரை காப்பாற்ற தமிழ்நாடு அரசு மருத்துவமனைக்கான தொகையை செலுத்தி உயிரைக் காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடத்திலும் விழிப்புணர்வு வரவேண்டும், கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது சாலை விபத்து குறைந்திருந்தாலும் முற்றிலும் குறைக்க  துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ரூபாய் 14 கோடியே 35 லட்சம் மதிப்பில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்காக அமைச்ச சேகர்பாபு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிகல் நாட்டி கல்வெட்டை திறந்து வைத்து பணிகளை துவக்கி வைத்தனர்.  பின்னர் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு,  தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் நேரடி பார்வையில் பேருந்து நிலைய பாதுகாப்பிற்கேற்ப போதிய முழு கட்டமைப்புடன் காவல் நிலையம் அமைக்கபடுவதாகவும், நுழைவாயிலில் 4.5. கோடி மதிப்பில் வரவேற்பு வளைவு அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 


மேலும் முடிச்சிரில்  அமைக்கபடும் ஆம்னி பேருந்து நிருத்தம் ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்து பயண்பாட்டிற்கு வரும் என்றும், கோயம்பேடு பேருந்து  நிலையத்தில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கிளாம்பாக்கத்தில் சலுகை கட்டணத்தில் இடம் வழங்கபடும் என்றும் தெரிவித்தார். அதேபோல் விரைவில் மலிவு விலை உணவகம் மற்றும் ஏடிம் மையம் துவங்கபடும் என்றார்.


மேலும் படிக்க | ஆளுநர் என்ட்ரி முதல் எக்ஸிட் வரை... சட்டப்பேரவையில் நடந்தது என்ன? - தலைவர்களின் ரியோக்சன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ