சென்னை: தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூல்நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்  இன்று பிற்பகல் சென்னை வருகிறார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நேற்று முன்தினம் நடத்திய தியான புரட்சிக்குப் பிறகு ஆளும் கட்சி ஆட்டம் கண்டுள்ளது. 


118 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். அந்த 117 எம்.எ.ல்.ஏ.,க்கள் யாருக்கு ஆதரவு தருவார்கள் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. என்னதான் அதிமுக எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பாக சிறை வைத்தாலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று தில்லாக கூறியுள்ளார் ஓ. பன்னீர்செல்வம். 


அதிமுகவில் மொத்தம் 136 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில் பேரவைத் தலைவரை கழித்து மொத்தம் 134 உறுப்பினர்கள்தான். திமுக 89, காங்கிரஸ் 8, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 1, நியமன உறுப்பினர் 1, என சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். 


ஓ. பன்னீர்செல்வத்திற்கு இப்போது வரை 5 எம்.எல்.ஏ.,க்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். 60 எம்.எல்.ஏ.,க்கள் ஓ. பன்னீர்செல்வம் பக்கம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது சசிகலா கஸ்டடியில் 130 எம்.எல்.ஏக்களை வைத்துள்ளார். 


117 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும். அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே முதல்வராக தொடருவேன் என்று கூறியுள்ளார். 


தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு படையெடுப்பதால் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதுவரை 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு எம்பியும் ஆதரவு தெரிவித்துள்ளாராம். மேலும் பலர் அடுத்தடுத்த நாட்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரகசியமாக பலர் ஆதரவு தெரிவித்துள்ளனராம். 


இன்று தமிழகம் வரும் ஆளுநர் முன்பாக தனக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.,க்களை நிறுத்தி ஆட்சியமைக்க உரிமை கோருவார் சசிகலா. சசிகலா பெரும்பான்மையை நிருபிப்பாரா? பார்க்கலாம்.