ஜெ., பார்க்க மீண்டும் அப்போலோ - வித்யாசாகர் ராவ்
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிவதற்காக மீண்டும் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வருகை தந்தார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிவதற்காக மீண்டும் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வருகை தந்தார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். காலை சுமார் 11.30 மணியளவில் அவர் மருத்துவமனைக்குள் சென்று டாக்டர்களிடம் ஜெயலலிதா உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் செப்டம்பர் 22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.
அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன ஆனால் கடந்த 10 நாட்களாக அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. தற்போது ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படுவதாகவும், அவரது உடல் நலம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. முதல்-அமைச்சர் நன்றாக பேசுகிறார். அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது