தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக முழுவதும் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. பல அரசியல் கட்சி தலைவர்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில், மழையால் பாதிக்கப்பட்ட தாம்பரம் பகுதியையும், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியையும் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று ஆய்வு செய்தார். 


அப்பொழுது அவர் நிருபர்களிடம் பேசியதாவது:- 


* மழை நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு பயன்படுத்தப்படவில்லை. 


*அமைச்சர்கள் தற்போது மாறி மாறி பேசி வருகிறார்கள், இதனால் தான் ஜெயலலிதா அமைச்சர்களை பேசவிடாமல் வைத்திருந்தார் என அவர் கூறினார்.