குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை ஒட்டி தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியரசு முன்னாள் தலைவரும், காங்கிரஸ் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி காலமான நிலையில், நாடு முழுவதும் இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கொடிகள் அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அனைத்து இந்திய தூதரகங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | ஆசியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்துள்ள நாடு இந்தியா..! 


இதை தொடர்ந்து, குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை ஒட்டி தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, தமிழக அரசின் பொதுத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும், அரசு நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.