தமிழகத்தின் புதிய 5 மாவட்டங்களுக்கு SP, ஆட்சியர்கள் நியமனம்..!
புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு..!
புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு..!
சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட, 32 மாவட்டங்கள் இருந்தன. பல மாவட்டங்களின் எல்லைகள் பெரிதாக இருந்ததால், அவற்றை பிரிக்க வேண்டும் என, அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. மேலும், புதிய தாலுகா விவரங்களையும், தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நான்கு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி, 4 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதுகுறித்த அரசாணையை, நவம்பர் 12 ஆம் தேதியிட்டு, தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு ஆட்சியராக ஏ.ஜான் லூயிஸ், திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், ராணிப்பேட்டை ஆட்சியராக திவ்யதர்ஷிணி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா, தென்காசி மாவட்ட ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் மாவட்ட ஆட்சியராக தமிழக அரசு நியமித்துள்ளது.
இதை தொடர்ந்து, புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு காவல்துறை எஸ்.பிக்களை நியமனம் செய்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி விஜயகுமார், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சியில், காவல்துறை துணை ஆணையராக இருந்த மயில்வாகனன், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சுகுனாசிங் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், ஜெயச்சந்திரன் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாகவும், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக கண்ணன் உள்ளிட்ட 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.