தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரும் தீபாவளி பண்டிகையை வருவதை அடுத்து தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையை அறிவித்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி போனஸ் அறிவித்திருந்தார்.


இதன்படி மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம், ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவிகித போனஸ் கிடைக்கும். 3 லட்சத்து 58 ஆயிரத்து 330 பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மொத்தம் 486 கோடியே 92 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 


இதை தொடர்ந்து தற்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான போனஸ் தொகையை தமிழக முதலவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுவதாகவும், அதில், 8.33% தீபாவளி போனஸ் ஆகவும், 11.67% கருணைத்தொகையாகவும் வழங்கப்படுகிறது. இந்த தீபாவளி போனஸ் தொகையால் சுமார் 1,44,045 தொழிலாளர்க பயன்பெறுவார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழி வகை செய்யும்.