மெரினாவில் இடம்..!! அதுதான் மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை -ரஜினி
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு இடம் தர வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த 11 நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணி அளவில் காலமானார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அங்கு இடம் ஒதுக்க முடியாது எனவும், பல சட்ட சிக்கல்கள் உள்ளது. காமராஜ் நினைவகம் அருகே 2 ஏக்கர் நிலம ஒதுக்கப்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் தமிழக அரசின் முடிவை எதிர்த்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் கோரபப்ட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டு உள்ளது. இரவு 10.30 மணிக்கு வழக்கு விசாரனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை" என கூறியுள்ளார்.
இதேபோல பல அரசியல் தலைவர்கள் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன என்பது குறிபிடத்தக்கது.