சென்னை புத்தக்காட்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி..!
45வது சென்னை புத்தகத் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் சென்னை புத்தக கண்காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த கண்காட்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், புத்தக கண்காட்சியை நடத்த அனுமதிக்ககோரி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது.
ALSO READ | அன்புள்ள வாழ்க்கையின் உரையாடல்: மனச்சோர்வை எதிர்த்து பேசும் புத்தகம்
இதனை பரிசீலித்த தமிழக அரசு, சென்னை புத்தக கண்காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ நந்தனம் மைதானத்தில் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் மார்ச் 6 வரை என மொத்தம் 19 நாட்கள் சென்னை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. புத்தக திருவிழாவில், இடம்பெறும் அனைத்து அரங்குகளிலும் இரண்டு வாயில்கள் இருக்க வேண்டும், ஒரே நேரத்தில் 3 பார்வையாளர்களை மட்டுமே அரங்கினுள் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு அரங்கிலும் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும், 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோரை புத்தக கண்காட்சிக்கு வர அனுமதி இல்லை. காலை 10 மணிக்கு தொடங்கும் புத்தக கண்காட்சி இரவு 7 மணி வரை நடைபெறும். அரங்க பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும். இவை தவிர தொற்றுநோய் குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ள அரசு, கட்டாயம் கூட்டம் கூடுவதை அனுமதிக்ககூடாது என அறிவுறுத்தியுள்ளது.
ALSO READ | 115 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மகாராணா அறைகள்.. விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR