விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் குறித்து ஆஸ்திரேலிய விக்டோரியா மாநிலத்துடன் தமிழ்நாடு சுகாதாரத் துறை ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியா சென்றுள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தமிழ்நாட்டில் ஜனவரி முதல் செயல்படுத்தப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் ஆஸ்திரேலிய விக்டோரியா மாநில விபத்து சிகிச்சை நடைமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது. இதன் மூலம் விபத்தினால் ஏற்படும் இறப்புகள் 8.3 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் படி விபத்து சிகிச்சைகளுக்கான அமைப்புகளை ஏற்படுத்துதல், மாநில அளவிலான விபத்து பதிவேடுகளை பராமரித்தல், விபத்து சிகிச்சைகளின் தரம் உயர்த்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளது.


சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ பணிகள் மேலாண்மை இயக்குனர் உமாநாத் ஐ ஏ எஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழு ஆஸ்திரேலிய விக்டோரியா மாநில நாடாளுமன்றத்தில் சிறப்பு விருந்தினர்களாக கவுரவிக்கப்பட்டனர்.