Anna University Institute of Eminence: அண்ணா பல்கலைக்கழகத்திற்கான உயர் சிறப்பு தகுதி (Institute of Eminence) தேவையில்லை மற்றும் அதை மாநில அரசு விரும்பவில்லை என்று தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். IoE பிரச்சினை தொடர்பாக தமிழக அரசுக்கும் பல்கலைக்கழக துணைவேந்தரும் இழுபறி இருக்கும் நேரத்தில் அமைச்சரின் கருத்து வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தர்மபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஐஓஇ (IoE) அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு (Anna University) வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது என்று கூறினார். "அதில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், 69% இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுமா? ஏழை மாணவர்களை சேர்ப்பதற்காக நுழைவுத் தேர்வு அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அது மட்டுமல்லாமல், கட்டணங்களும் அதிகரிக்கக்கூடும். தமிழகத்திற்கு வெளியில் இருந்து அதிகமான மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் நமது தமிழக மாணவர்கள் தங்கள் வாய்ப்புகளை இழக்க நேரிடும். இவற்றில் எதையும் அதிமுக அரசு ஏற்றுக்கொள்ளாது" என்றார்.


பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் (Vice Chancellor) மூன்று ஆண்டுகள் மட்டுமே பொறுப்பு வகிக்கிறார்கள். தமிழக அரசிடம் கலந்தோசிக்காமல் நேரடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் எம்.கே. சூரப்பாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 


ALSO READ |  அரியர்ஸ் தேர்வு: "மனித கடவுளுக்கு வந்த சோதனை" மாணவர்களை ஏமாற்றியதா தமிழக அரசு?


பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சியை வழங்க மாநில அரசு துணை நிற்கும் கூறினார். IoE அந்தஸ்தை தேவையில்லை. "நாங்கள் (அண்ணா பல்கலைக்கழகம்) ஏற்கனவே என்ஐஆர்எஃப் தரவரிசையில் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம். சிறந்த தரவரிசை பெற எங்களுக்கு ஒரு ஐஓஇ (IoE) சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியமில்லை: என்று அவர் கூறினார்.


அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே. சூரப்பாவை (MK Surappa) பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக வலுவடைந்து வருகிறது, பல அரசியல் தலைவர்களும் கல்வி நிபுணர்களும் இந்த வரிசையில் இணைந்துள்ளனர். அவர்களின் முக்கிய கருத்து என்னவென்றால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ஒருவர் நேரடியாக யூனியன் அரசாங்கத்திற்கு எப்படி கடிதம் எழுதினார் என்றும், அண்ணா பல்கலைக்கழகம் ஐஓஇ சிறப்பு அந்தஸ்துக்கு தேவையான நிதியை உள்நாட்டில் உருவாக்க முடியும் என்றும் தமிழக அரசின் உதவி தேவையில்லை என்றும் எப்படி கூறினார் என்றும், எம்.கே. சூரப்பாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


ALSO READ |  மாநில பல்கலை.,-களை ஆக்கிரமிப்பதை பாஜக கைவிட வேண்டும் -MKS!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G