பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுபிரமணியன் திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் புதிய சுகாதார கட்டிடம் மற்றும் குளிக்கரை பகுதியில் செவிலியர்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்பு ஆகியவற்றினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன்  திறந்து வைத்தார். இதே போல திருவாரூர் மாவட்டத்தில் வடகண்டம், உத்தமதானபுரம், கண்டியூர், நுணாகாடு, தீபங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எட்டு மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திமுக கூட்டணி 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லை - தங்கர்பச்சான்


இதற்காக திருவாரூர் அருகே வடகண்டம் பகுதியில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் மாசுபிரமணியன், இந்திய வரலாற்றில் இலவசமாக செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 237, தனியார் 457 ஆஸ்பத்திரிகள் என 694 ஆஸ்பத்திரிகளில் இத்திட்டம்  செயல்படுத்தப்பட்டு, இதுவரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 256 விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக 2 ஆண்டுகளில் மட்டும் அரசு ரூ.221 கோடியே  11லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 


இந்நிலையில், இதற்கான சிகிச்சை உதவி ரூபாய் ஒரு லட்சம் என்பது ரூபாய் இரண்டு லட்சமாக உயர்த்தபடும் என முதல்வர் தெரிவித்துள்ளார். வரும் ஜூலையில் இது நடைமுறைக்கு வர உள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ வசதிக்கென சுமார் 2 ஆயிரத்து 500 கட்டடங்கள் கட்ட திட்டமிட்டு இருவரை ஆயிரத்து 100 க்கும் மேற்பட்ட புதிய கட்டடங்கள் கட்டி பயனுக்கு தரப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், தாட்கோ தலைவர் மதிவாணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க | விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ