இனி 24 மணி நேரமும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் செயல்படலாம்!
Shop opening Time: தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி
சென்னை: 10 அல்லது அதற்கு மேல் பணியாளர்களை கொண்ட வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அறிவிப்பு.
2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று காரணமாக கடைகள் திறக்கும் நேரம் நாடு முழுவதும் குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டுமே கடைகளை திறக்க மத்திய, மாநில அனுமதி அளித்தது.
கடைசியாக 2019-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் 3 ஆண்டுகளுக்கு கடைகள் 24 மணி திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த அரசாணை இந்த ஆண்டுடன் முடிவடைந்ததால், மேலும் 3 ஆண்டுகளுக்கு இதை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
கடைசியாக 2019-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் 3 ஆண்டுகளுக்கு கடைகள் 24 மணி திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த அரசாணை இந்த ஆண்டுடன் முடிவடைந்ததால், மேலும் 3 ஆண்டுகளுக்கு இதை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: 8 மாதங்களில் கட்டடம்- 4 ஆண்டுகளாக ஒற்றை செங்கல்: வைரலாகும் சு.வெங்கடேசனின் பதிவு
இந்த உத்தரவு கடந்த 5-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 24 மணி நேரம் கடைகளை திறக்க சில நிபந்தனைகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.
24 மணி நேரம் கடைகளை திறக்க நிபந்தனைகள்:
* 24 மணி நேரமும் செயல்படும் கடைகள் ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும்.
* ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரம் அல்லது வாரத்திற்கு, 48 மணி நேரத்திற்கு மேல் யாரையும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
* பணியாளர்கள் கூடுதல் நேரம் வேலை பார்த்தால், நிறுவனம் கூடுதல் ஊதியம் வழங்கவேண்டும்.
* இரவு 8:00 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக் கூடாது.
* பணியில் இருக்கும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.
* பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.
* பணியிடங்களில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு குழு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
* தொழிலாளர்களுக்கு கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட, அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
இந்த விதிகளை மீறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: கந்துவட்டிகாரர்களுக்கு ஆப்பு அடிக்கும் "ஆப்ரேஷன் கந்துவட்டி"
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR